Question – கேள்வி -^-}->
—————————
By – Mnatarajan Rani :
————————–
அன்புடையீர்
ஒவ்வான அவ்வெழுத்து மகாமேறு
ஊமை எழுத்தானை ஒரு வேதமும்
அறியாத பரமாமே
2
ஒமென்றழெத்தே உயிராச்சே இந்த ஊமை
எழுத்தே உடலாச்சே நாமிந்த எழுத்தை அறிந்து கொண்டோமில்லை நாடி கும்மி யடியுங்கடி
இதில் ஊமை எழுத்தைப் பற்றி விளக்குங்கள்
———————–
Answer – பதில் -^-}-*
———————–
ஊமை எழுத்தென்பது பேசா எழுத்து. அஃதாவது ‘ம்’.
—————————————————————————
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் (ஆங்கிலத்திலும் : மம் – MUM….mmmm !)
—————————————————————————
மெய்யெழுத்துக்கள் உயிரைச் சார்ந்தன்றி ஒலியா.
அதனால் அவை ஊமை எழுத்தெனப்படும்
——————————–
திருமந்திரம் | 8ம் தந்திரம் |
10ம் திருமுறையில்
பாடிய பாடல் 2158.
——————————–
ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்
ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும்
ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றது
நாமயம் அற்றது நாம்அறி யோமே.
பொருள் :
பேச இயலாத எழுத்தாகிய மகாரத்தோடு
பேசும் எழுத்துக்களாகிய அகார உகாரங்கள் பொருந்தில் ஆமைக்குள் அதன் உறுப்புக்கள் அடங்குவன போல்
ஐந்து, இந்திரியங்களும் செயல்படாமல் அடங்கிவிடும். அப்போது ஆன்மா பிரணவத்தில் பொருந்தி ஒளிபெற்று விளங்கும். அப்போது அகங்காரம் கெட்டதை நாம் அறியமாட்டோம்.
(ஓம் – அ+உ+ம் தூலப்பிரணவம்)
ம் – மெய்யெழுத்து (ஊமை எழுத்து) உயிரைச் சார்ந்து அன்றி ஒலியாது. அகர உகரங்கள் பேசும் எழுத்துக்கள்.
அ – ஆற்றல் – சக்தி.
உ – அறிவு – சிவம்.
ஊமை எழுத்து – (ம்) மலம்.
இந்த மந்திரத்தை
”பேசாத மந்திரம்”,
”ஊமை எழுத்து”,
”நெஞ்செழுத்து”,
”மௌன அட்சரம்”
“நாயோட்டு மந்திரம்”
என பல பெயர்களில் சித்தர்கள்
தங்கள் பாடல்களில் விளக்கியுள்ளனர்.
கொங்கணவர் இந்த மந்திரம் பற்றி இப்படி சொல்கிறார்..
“ஓம் என்ற அட்சரம் தானுமுண்டு அதற்க்குள்
ஊமை எழுத்தும் இருக்குதடி”
திருமூலர் இதனை “நாயோட்டு மந்திரம்” என்கிறார்.
“நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும் என்பரே
நாயோட்டு மந்திரம் இந்நாய்க்கு மிக உகந்ததே
நாயோட்டு மந்திரம் நாயேன்யான் விட்டிலேன்
நாயோட்டு மந்திரம் இந் நாயை வீடு சேர்க்குமே!”
– திருமூலர் –
சிவவாக்கியர் இந்த மந்திரத்தினை இப்படி குறிப்பிடுகிறார்
“அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து சொல்ல வல்லிரேல்”
“அஞ்செழுத்தில் ஒரேழுத்து ” என குறிப்பு தருகிறார்.
அதாவது ந ம சி வா ய என்கிற ஐந்தெழுத்தில் ஓர் எழுத்து !
வள்ளலாரும் இந்த மந்திரத்தின் குறிப்பை இப்படிச் சொல்கிறார்.
“ஒரேழுத் தில் ஐந்துண்டென்பார் வெண்ணிலாவே
-அது ஊமை எழுத்தாவதென்ன வெண்ணிலாவே ”
அகத்தியரும் இந்த மந்திரத்தின் அருமைகளை
பின் வருமாறு கூறுகிறார்.
“எகமேனும் ஓரெழுத்தின் பயனைப் பார்த்தே
எடுத்துரைக்க இவ்வுலகில் எவருமில்லை
ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக் கொண்டே
அறிந்தொமேன்பர் மௌனத்தை அவனை நீயும்
வேகாச் சாகாத தலை கால் விரைந்து கேளாய்
விடுத்த அதனை உரைப்பவனே ஆசானாகும்
தேகமதில் ஒரெழுத்தை காண்பவன் ஞானி
திருநடனம் காண முத்தி சித்தியாமே!” வாலை ஞான பூஜா விதி என்ற நூலில் இந்த ஊமையெழுத்தை பற்றி போகரால் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பாடலில் சிவவாக்கியர் பின்வருமாறு விளக்குகிறார்.
அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா?
உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா?
அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா?
விகாரமற்ற யோகிகள் விரிந்துரைக்க வேணுமே?
அகாரமாகிய ”அ”வ்வும்,
உகாரமாகிய ”உ”வ்வும்
சிகாரமாகிய ”சி”வ்வும்
இல்லாமல் இணைய முடியாது.
இது எப்படி என்பதை யோகி ஒருவரே
உபதேசிக்க வேண்டும் என்கிறார்.
இந்த ரகசியம் காலம் காலமாய் குருமுகமாவே வழங்கப் படுகிறது. இதனையே குரு உபதேசம் என்கின்றனர்.
திருநெல்வாயில் அரத்துறை
சிகரம் முகத்திற் றிரளார் அகிலும்
மிகவுந் திவருந் நிவவின் கரைமேல்
நிகரில் மயிலா ரவர்தாம் பயிலும்
நெல்வா யிலரத் துறைநின் மலனே
மகரக் குழையாய் மணக்கோ லமதே
பிணக்கோ லமதாம் பிறவி இதுதான்
அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய்
அடியேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
– தேவாரம்
திருமறைக்காடு
சிகரத்திடை இளவெண்பிறை வைத்தான் இடந் தெரியில்
முகரத்திடை முத்தின்னொளி பவளத்திரள் ஓதத்
தகரத்திடை தாழைத்திரள் ஞாழற்றிரள் நீழள்
மகரத்தொடு சுறவணங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே
– தேவாரம்
போகரின் வாலை ஞான பூஜா விதி மற்றும்
இராமலிங்க அடிகளின் சின்மய தீபிகை நூலில் ஊமையெழுத்தை பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரமும்
இலிங்கநற் கண்ட நிறையு மகாரம்
இலிங்கத்துள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்க மகார நிறைவிந்து நாதமே
“அகார முதலா யனைத்துமாய் நிற்கும்
உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும்
அகார வுகாரம் இரண்டு மறியில்
அகார வுகாரம் இலிங்கம் தாமே”
அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும்
பிஞ்செழுத்தும் மேலைப் பெருவெழுத்தும் – நெஞ்சழுத்திப்
பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்
கூசாமற் காட்டக் கொடி.
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
———–
படங்கள் :
———-
1 – நாதபிந்து சிவப்பு
2 – ஒகார வடிவம்
3 – A U m Red
4 – Sahas-3..mmmம்ம்ம்



